Local Swiss News

வோட் கன்டோனில் பள்ளி ஒழுங்கு பிரச்சினைக்கு புதிய திட்டம்: ஆசிரியர்களுக்கு ஆதரவு நடவடிக்கை

வோட் கன்டோனில் பள்ளி ஒழுங்கு பிரச்சினைக்கு புதிய திட்டம்: ஆசிரியர்களுக்கு ஆதரவு நடவடிக்கை

வோட் கன்டோனில் பள்ளி ஒழுங்கு பிரச்சினைக்கு புதிய திட்டம்: ஆசிரியர்களுக்கு ஆதரவு நடவடிக்கை

வோட் கன்டோனில் பாடசாலைகளில் அதிகரித்து வரும் ஒழுங்கீன நடத்தை மற்றும் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க புதிய திட்டம் ஒன்றை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் கற்பித்தலை பாதிக்கின்றன என்ற புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் கல்வி அமைச்சர் பிரெடெரிக் போர்லோஸ் (Frédéric Borloz) அறிவித்ததன்படி, 2028 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் விசேட “Resource Space” எனப்படும் ஆதரவு அறைகள் அமைக்கப்படவுள்ளன.
N7b

இந்த அறைகளில் சிறப்பு நிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள். வகுப்பறைகளில் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடக்கும் அல்லது கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும் மாணவர்களை தற்காலிகமாக அங்கு அனுப்பி மேற்பார்வையில் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சி திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதோடு, வகுப்பறைகளில் ஏற்படும் வாய்வழி மற்றும் உடல் வன்முறை சம்பவங்களை கையாள தெளிவான நடைமுறைகளும் உருவாக்கப்படுகின்றன.

இந்த திட்டங்களை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. இருப்பினும், அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை பார்க்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button