Local Swiss News

லூசெர்னில் பரபரப்பு… கான்டினென்டல் பார்க் ஹோட்டல் கூரையில் பயங்கர தீ!

லூசெர்னில் பரபரப்பு... கான்டினென்டல் பார்க் ஹோட்டல் கூரையில் பயங்கர தீ!

லூசெர்னில் பரபரப்பு… கான்டினென்டல் பார்க் ஹோட்டல் கூரையில் பயங்கர தீ!

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் உள்ள மர்பாக்கர்ஸ்ட்ராஸ் வீதியில் அமைந்துள்ள கான்டினென்டல் பார்க் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

20j 1

ஹோட்டலின் கூரைப் பகுதியில் முதலில் அடர்த்தியான புகை எழுந்ததைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில், கூரையிலிருந்து கரும்புகை வானத்தை மூடுவதும், தீப்பிழம்புகள் மேலெழுவதும் தெளிவாகக் காணப்படுகிறது.

சம்பவம் குறித்து லூசெர்ன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மீட்புக் குழுக்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவாமல் தடுக்க, ஹோட்டலின் கூரையின் சில பகுதிகளை தீயணைப்புத் துறையினர் அகற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழப்பு அல்லது காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தீ விபத்திற்கான காரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button