100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்… அதிர்ச்சியில் ஜெனீவா!
100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்... அதிர்ச்சியில் ஜெனீவா!

100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்… அதிர்ச்சியில் ஜெனீவா!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை சுமார் 3 மணியளவில், மலக்னோ சாலையில் போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது, பின்னால் வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, அந்தப் பகுதியில் இரண்டு கார்கள் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றை ஓட்டிய 1994-ஆம் ஆண்டு பிறந்த நபர், கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலில் நின்றிருந்த 1996-ஆம் ஆண்டு பிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளார்.
இந்த மோதலின் தாக்கத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஓட்டுநரை ஜெனீவா நீதித்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு பிரான்ஸ் நாட்டுக் கார் ஓட்டுநரிடமும் பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்த விபத்திற்கான முழுமையான காரணத்தை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





