மத சுதந்திரமா? பொது ஒழுங்கா? சூரிச்சில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
மத சுதந்திரமா? பொது ஒழுங்கா? சூரிச்சில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்!

மத சுதந்திரமா? பொது ஒழுங்கா? சூரிச்சில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலம், ஸ்டாஃபா Stäfaபகுதியில் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தனது ஓய்வு நேரத்தில் பேருந்தின் முன்பாக தொழுகை நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, சூரிச்ஸீ மற்றும் ஓபர்லாந்து போக்குவரத்து ஆணையமான VZO-வில் பணியாற்றும் அந்த ஓட்டுநர், தனது தொழுகை விரிப்பை பேருந்தின் முன் விரித்து, மெக்காவை நோக்கி தொழுதார். இந்தக் காட்சியை நேரில் கண்ட ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறியது.

இதையடுத்து, அந்த ஓட்டுநருடன் VZO நிர்வாகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கால அட்டவணை பாதிக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பொது இடங்களில் அல்லாமல், ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறைகளிலேயே தனிப்பட்ட மத வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஊழியர்களின் மத சுதந்திரத்தை முழுமையாக மதிக்கிறோம் என்றும், ஆனால் பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் உருவாகாமல் இருக்க, இதுபோன்ற செயல்பாடுகள் பொருத்தமான இடங்களில் நடைபெற வேண்டும் என்றும் VZO விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவம், மத சுதந்திரம் மற்றும் பொது சேவை நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்து சுவிட்சர்லாந்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





