பிரிபூர் கன்டோன் கொலை வழக்கு முடிவு: சந்தேக நபர் உயிரிழந்ததால் விசாரணை நிறுத்தம்
பிரிபூர் கன்டோன் கொலை வழக்கு முடிவு: சந்தேக நபர் உயிரிழந்ததால் விசாரணை நிறுத்தம்

பிரிபூர் கன்டோன் கொலை வழக்கு முடிவு: சந்தேக நபர் உயிரிழந்ததால் விசாரணை நிறுத்தம்
பிரிபூர் கன்டோனின் எபான்யி பகுதியில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி இடம்பெற்ற கொலை மற்றும் குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டிருந்த குற்றவியல் விசாரணைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிபூர் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது மனைவி வேலை செய்து கொண்டிருந்த வில்லாவிற்கு சென்று, அங்கு அவரை வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததுடன், மேல்தளத்திற்கு சென்று அதே ஆயுதத்தை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறு பரிசோதனைகளில், தீ முழுவதும் பரவுவதற்கு முன்னரே இருவரும் உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், உயிரிழந்த பெண் 2024 ஆம் ஆண்டிலேயே தனது கணவருக்கு எதிராக குடும்ப, உடல் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக புகார் அளித்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் உயிரிழந்த காரணத்தால், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த கொலை, தீவைத்தல் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளும் 2026 ஜூன் 1 ஆம் திகதி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






