கணநேர அலட்சியம்… 12 மீட்டர் பறந்த பாதசாரி, பரபரப்பை ஏற்படுத்திய விபத்து!
கணநேர அலட்சியம்... 12 மீட்டர் பறந்த பாதசாரி, பரபரப்பை ஏற்படுத்திய விபத்து!

கணநேர அலட்சியம்… 12 மீட்டர் பறந்த பாதசாரி, பரபரப்பை ஏற்படுத்திய விபத்து!
சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 32 வயதான பாதசாரி ஒருவர் சுமார் 12 மீட்டர் தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி 45 நிமிடத்திற்கு முன்பாக ஃபர்ஸ்டன்லாண்ட்ஸ்ட்ராஸ் Fürstenlandstrasse சாலையில் இடம்பெற்றது. 58 வயதுடைய டெலிவரி வேன் ஓட்டுநர் நகர மையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையைக் கடக்க முயன்ற 32 வயதுடைய நபரை கவனிக்கத் தவறியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகாலையின் தாழ்வான சூரிய ஒளி நேரடியாக கண்களில் பட்டதால், பாதசாரி தெளிவாக தெரியாமல் போனதே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேகமாக வந்த வேன் மோதியதில், பாதசாரி சுமார் 12 மீட்டர் தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே முதலுதவி வழங்கி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்தில் டெலிவரி வேனும் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை செயின்ட் கேலன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.






