7 மணி நேர அதிரடி சோதனை! விக்னெட் இல்லாத 191 வாகனங்கள் சிக்கின…
7 மணி நேர அதிரடி சோதனை! விக்னெட் இல்லாத 191 வாகனங்கள் சிக்கின…

7 மணி நேர அதிரடி சோதனை! விக்னெட் இல்லாத 191 வாகனங்கள் சிக்கின…
சுவிட்சர்லாந்தில் விக்னெட் இல்லாமல் நெடுஞ்சாலையில் பயணித்த 191 வாகனங்கள் ஒரே நாள் நடைபெற்ற அதிரடி சோதனையில் சிக்கியுள்ளன.
பேசல் அருகே உள்ள Basel–Saint-Louis மற்றும் Basel–Weil am Rhein எல்லைக் கடப்புகளில், கூட்டாட்சி சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் பெரிய அளவிலான விக்னெட் சோதனையை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையின்போது, சுவிஸ் மோட்டார் பாதைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணிக்க தேவையான விக்னெட் இல்லாத மொத்தம் 191 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் 111 வாகனங்கள் சுவிஸ் பதிவு எண்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமீறலில் சிக்கிய ஓட்டுநர்கள், சம்பவ இடத்திலேயே தேவையான விக்னெட்டை வாங்கியதுடன், கூடுதலாக 200 சுவிஸ் பிராங்குகள் அபராதமும் செலுத்த வேண்டியிருந்தது.
சுவிட்சர்லாந்தில் மோட்டார் பாதைகள் மற்றும் விரைவுச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு விக்னெட் கட்டாயமாகும்.
தற்போது ஆண்டு விக்னெட்டின் விலை 40 சுவிஸ் பிராங்குகள். இது ஸ்டிக்கர் வடிவிலும், e-vignette எனப்படும் மின்னணு வடிவிலும் கிடைக்கிறது.
அதிகாரிகள் மற்றும் மண்டல காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகளை நடத்தி விதிமீறல்களை கண்டறிந்து வருகின்றனர்.






