Swiss News In Tamil

நாயால் வந்த வினை… அனோஜன் முதல் சுவிஸ் மக்கள் வரை! சிறப்பு செய்திப்பார்வை

நாயால் வந்த வினை... அனோஜன் முதல் சுவிஸ் மக்கள் வரை! சிறப்பு செய்திப்பார்வை

நாயால் வந்த வினை… அனோஜன் முதல் சுவிஸ் மக்கள் வரை! | சிறப்பு செய்திப்பார்வை

வணக்கம்… இது “SwissTamilTv”வழங்கும் Sunday சிறப்பு செய்திப்பார்வை…

இன்று நாம் பேசப் போகும் இரண்டு செய்திகள்… ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாதது போலத் தோன்றலாம்.

ஒன்று… இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் நடந்த சம்பவம்.

மற்றொன்று… சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகியிருக்கும் ஒரு புதிய சட்டம்.

ஆனால், இந்த இரண்டு செய்திகளையும் இணைக்கும் ஒரு பொதுவான வார்த்தை இருக்கிறது.

அது… “சமூக பொறுப்பு.”


முதலில் முதல் செய்தியைப் பார்ப்போம்.

இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர், சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்தவர்.

சமூக ஊடகத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் ஆரம்பத்தில் சமூக ஊடகங்களில் பரவிய ஒரு நாய் தொடர்பான வீடியோ மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளின் பின்னணியில் உருவானது என்பதை உங்களில் பலர் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அதனால் அந்தச்சம்பவம் தொடர்பில் இங்கே நாம் மீண்டும் விபரிக்கதேவையில்லை என நினைக்கிறேன்.

ஆனால் இன்று நாம் விவாதிப்பது அந்த வழக்கின் விவரங்களை அல்ல.

ஒரு சில நொடிகளில் எடுக்கப்பட்ட முடிவு… ஒரு குடும்பத்தின் பல வருட வாழ்க்கையை எப்படி மாற்றிவிட முடியும் என்பதைத்தான்.

ஒரு பதிவு…

ஒரு கருத்து…

ஒரு “ஷேர்”…

சில நேரங்களில் அதற்கான விலை… ஒரு மனிதனின் எதிர்காலமாக இருக்கலாம்.

பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல.

அவருடைய பெற்றோர்…

குடும்பம்…

அவரை நம்பியிருந்தவர்கள்…

அனைவருமே அந்த வேதனையை சுமக்க வேண்டிய சூழல் உருவாகிறது என்பதை அனோஜன் தொடர்பான செய்தி உணர்ந்துகிறது..

01fe59f4 8b11 43fa 9d56 25f4240e0bba


இப்போது சுவிட்சர்லாந்துக்கு வருவோம்.

இங்கேயும் இன்றைய தலைப்பு…

நாய்தான்!

ஆனால் இந்த முறை, சமூக ஊடகப் பதிவு இல்லை… சுவிஸ் நாட்டின் ஒரு மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள செய்தி

நாய் சிறுநீர்!

என்னது நாய் சிறுநீரா..? அதிலென்ன பிரச்சினை என்று நீங்கள் என்னலாம்…

ஆம்.!! டிசினோ மாகாணத்தில் உள்ள சியாசோ நகராட்சி, நாட்டிலேயே முதல் முறையாக ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனிமேல் உங்கள் நாய் நடைபாதையிலோ அல்லது வீட்டு சுவரிலோ சிறுநீர் கழித்தால்…

“அது நாய்தானே…” என்று நடந்துசெல்ல முடியாது.

உடனடியாக தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால்…

100 சுவிஸ் பிராங்க் அபராதம்!

அதாவது…

இனிமேல் நாயை வெளியே அழைத்துச் செல்லும்போது…

கயிறு…

பைகள்…

அதோடு சேர்த்து…

ஒரு தண்ணீர் பாட்டிலும் கட்டாயம்! கொண்டு போயிடுங்க… இல்லண்ணா 100 CHF காலி.!!

திடீர்ன்னு ஏன் இந்த வித்தியாசமான முடிவு என்று உங்களுக்கு என்னத்தோன்றலாம்..  உங்களுக்கு தெரியும் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் வெப்பம் காரணமாக துர்நாற்றம் அதிகரித்திருப்பதால், பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது.

நாய்கள் பொதுவெளியில் மலம் கழித்தால் அதற்குரிய நடமுறைகள் சுவிசில் ஏற்கனவே இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இனி சிறுநீருக்கும் புதிய விதி வந்திருப்பது நாய் வைத்திருப்பவர்களுக்கு கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருக்கும்…


பாருங்கள்…

ஒரு நாட்டில்…

ஒரு சமூக ஊடகப் பதிவு…

மற்றொரு நாட்டில்…

ஒரு நாயின் சிறுநீர்…

இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு.

ஆனால் இரண்டு நாடுகளும் சொல்லும் செய்தி ஒன்றுதான்.

“உங்களுடைய செயலுக்கு நீங்கள்தான் பொறுப்பு.”

சவூதியில்…

ஒரு வார்த்தைக்குக் கூட சட்டம் பதில் கேட்கிறது.

சுவிட்சர்லாந்தில்…

ஒரு நாயின் செயலுக்குக்கூட அதன் உரிமையாளரிடம் சட்டம் பொறுப்பு கேட்கிறது.


இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

சமூக ஊடகத்தில் எதையும் எழுதுவதற்கு முன்…

அது யாரை புண்படுத்தும்?

எந்த நாட்டின் சட்டத்தை மீறும்?

என்ன விளைவை ஏற்படுத்தும்?

என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

அதேபோல்…

நாம் வாழும் சமூகத்தில்…

நம்மால் ஏற்படும் சிறிய அசௌகரியத்திற்குக்கூட பொறுப்பேற்கும் மனப்பான்மை இருக்க வேண்டும்.


ஒரு நிமிட அவசரம்…

ஒரு அலட்சியம்…

ஒரு பொறுப்பற்ற செயல்…

இவை மூன்றுமே…

சில நேரங்களில் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

அதனால்தான்…

சட்டத்தை மதிப்போம்…

பிறரின் நம்பிக்கைகளை மதிப்போம்…

நாம் வாழும் சமூகத்தையும் மதிப்போம்…

அப்போது மட்டுமே…

எந்த நாட்டில் வாழ்ந்தாலும்…

நிம்மதியாக வாழ முடியும்.

மீண்டும் மற்றொரு சுவாரஸ்யமான தலைப்பில் சந்திப்போம். நன்றி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button