Local Swiss News

ஜெனீவாவில் மூன்று நாள் வேலைநிறுத்தம் ஆரம்பம்: அரச ஊழியர்கள் பட்ஜெட் வெட்டுக்கு எதிர்ப்பு

ஜெனீவாவில் மூன்று நாள் வேலைநிறுத்தம் ஆரம்பம்: அரச ஊழியர்கள் பட்ஜெட் வெட்டுக்கு எதிர்ப்பு

ஜெனீவாவில் மூன்று நாள் வேலைநிறுத்தம் ஆரம்பம்: அரச ஊழியர்கள் பட்ஜெட் வெட்டுக்கு எதிர்ப்பு

ஜெனீவா கன்டோனில் முன்மொழியப்பட்டுள்ள 2026 வரவு-செலவுத் திட்ட வெட்டுகளுக்கு எதிராக அரச துறை ஊழியர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 900 ஊழியர்கள் கலந்து கொண்டு “பொது சேவைகளுக்கான நிதியை பாதுகாக்க வேண்டும்” என முழக்கமிட்டனர்.

சம்பள உயர்வுகள் முடக்கப்பட்டமை, பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சம்பள திருத்தங்கள் நிறுத்தப்பட்டமை மற்றும் புதிய ஓய்வூதிய சட்டம் காரணமாக ஊழியர்களின் வருமானம் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

N9 1 N9b

இந்த போராட்டத்தில் மருத்துவமனைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு அரச துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மேலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதுடன், நாளை மீண்டும் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 2026 பட்ஜெட் குறித்து ஜெனீவா Grand Council இல் இன்னும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த முடிவுகள் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button