குழந்தைத் தொழிலாளர் குற்றச்சாட்டு… லிண்ட்ட் நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு புதிய சவால்!
குழந்தைத் தொழிலாளர் குற்றச்சாட்டு... லிண்ட்ட் நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு புதிய சவால்!

குழந்தைத் தொழிலாளர் குற்றச்சாட்டு… லிண்ட்ட் நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு புதிய சவால்!
உலகப் புகழ்பெற்ற சுவிஸ் சாக்லேட் நிறுவனமான லிண்ட்ட் & ஸ்ப்ரூங்லி தற்போது அமெரிக்காவில் சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
கானா மற்றும் ஐவரி கோஸ்ட் நாடுகளில் இருந்து கோகோ கொள்முதல் செய்யும் போது, குழந்தைத் தொழிலாளர் முறையை தடுப்பதில் நிறுவனம் தனது நடவடிக்கைகளை தவறாக விளம்பரப்படுத்தியதாக ஒரு ஆர்வலர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
International Rights Advocates என்ற சட்ட அமைப்பு, அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
வழக்கில், லிண்ட்ட் நிறுவனம் தனது விநியோகச் சங்கிலியில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதாக கூறியிருந்தாலும், அதே பிரச்சினையிலிருந்து தொடர்ந்து லாபம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைத் தொழிலாளர் முறையை தடுக்க நிறுவனம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை லிண்ட்ட் & ஸ்ப்ரூங்லி நிறுவனம் மறுத்துள்ளது.
தங்களிடம் கடுமையான விநியோகஸ்தர் விதிமுறைகள் இருப்பதாகவும், சந்தேகிக்கப்படும் அனைத்து குழந்தைத் தொழிலாளர் சம்பவங்களும் முறையாக விசாரிக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2026-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்புகளை கொண்ட விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே கோகோ பெறும் இலக்கை ஏற்கனவே நிர்ணயித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த வழக்கு, உலகளாவிய சாக்லேட் தொழிலில் உள்ள விநியோகச் சங்கிலி வெளிப்படைத்தன்மை குறித்து மீண்டும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





