வானவேடிக்கை இல்லாத தேசிய தினம்… பல சுவிஸ் மாகாணங்களில் கடும் கட்டுப்பாடு!
வானவேடிக்கை இல்லாத தேசிய தினம்... பல சுவிஸ் மாகாணங்களில் கடும் கட்டுப்பாடு!

வானவேடிக்கை இல்லாத தேசிய தினம்… பல சுவிஸ் மாகாணங்களில் கடும் கட்டுப்பாடு!
சுவிட்சர்லாந்தின் தேசிய தினமான ஆகஸ்ட் 1 கொண்டாட்டங்களுக்கு இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் நீடித்து வரும் கடும் வறட்சி மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக, பட்டாசுகள் வெடிப்பதற்கும் தீ மூட்டுவதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
அப்பென்செல், கிளாரஸ், லூசெர்ன், சோலோதூர்ன் மற்றும் ஷாஃப்ஹவுசன் உள்ளிட்ட பல மாகாணங்களில் முழுமையான பட்டாசு தடை அமலில் உள்ளது.
ராக்கெட்டுகள், சிறிய பட்டாசுகள், தீப்பந்தங்கள் மட்டுமின்றி, திறந்த வெளியில் தீ மூட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஷாஃப்ஹவுசன் பகுதியில் நடைபெறும் பிரபலமான “Fire on the Rocks” பட்டாசு நிகழ்ச்சியும், உலகப் புகழ்பெற்ற ரைன் நீர்வீழ்ச்சி வாணவேடிக்கை நிகழ்ச்சியும் தீ அபாயம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில மாகாணங்களில் பொதுமக்களுக்கு பட்டாசு தடை இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொழில்முறை குழுக்கள் நடத்தும் சில பெரிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெர்ன், ஆர்காவ், சூரிச் உள்ளிட்ட பகுதிகளிலும் காடு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் தீ பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதிக வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக, இந்த ஆண்டு சுவிஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட அமைதியாக நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
வறட்சியை கட்டுப்படுத்தவும், தீ விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





