சூரிச்சில் தமிழர்கள் நடமாடும் பகுதியில் எலும்புக்கூடு : வெளிவந்த மர்மம்.!!
சூரிச்சில் தமிழர்கள் நடமாடும் பகுதியில் எலும்புக்கூடு : வெளிவந்த மர்மம்.!!

சூரிச்சின் லாங்ஸ்ட்ராஸ்… (Langstrtasse)
தமிழர்கள் அதிகம் நடமாடும் இடம். தமிழ் வணிக கடைகளும் பரபரப்பாக செயல்படும் பகுதி….
ஆனால், அங்கு உள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு சிறிய காற்றோட்டக் குழாய்க்குள்… கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மறைந்து கிடந்த ஒரு மர்மம்
சூரிச்சின் லாங்ஸ்ட்ராஸ்ச பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் 2024-ல் கட்டுமானப் பணிக்காக சுவர் உடைக்கப்பட்டது.
அப்போது பணியாளர்களுக்கு கிடைத்த காட்சி…
ஒரு மனிதனின் தலையோடு!
அதன் அருகில்… மனித எலும்புகள்.
அந்த நபர் யார்?
அவர் எப்படி அங்கே வந்தார்?
அவர் எப்படி இறந்தார்?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான்… இந்தக் கதையின் ஒரு முக்கியமான பகுதி தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

**********
சரி… கதையை ஆரம்பத்திலிருந்து பார்ப்போம்.
இது 2024ஆம் ஆண்டு வசந்த காலம்.
சூரிச்சின் பிரபலமான லாங்ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
வழக்கம்போல சுவர் உடைக்கும் வேலை.
ஆனால், அந்தச் சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
ஒரு கட்டத்தில்…
பணியாளர்கள் காற்றோட்டக் குழாய்க்குள் ஏதோ இருப்பதை கவனிக்கிறார்கள்.
முதலில் அது என்னவென்று புரியவில்லை.
சற்று கவனமாகப் பார்த்தபோதுதான்…
அது மனித எலும்புகள் என்பது தெரிய வந்தது.
அதிலும் முக்கியமாக…
ஒரு மனிதனுடைய மண்டையோடு.
அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு இது சாதாரண சம்பவம் இல்லை என்பது உடனடியாக புரிந்துவிட்டது.
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி பாதுகாப்பாக மூடப்பட்டது.
அதன் பிறகு ஆரம்பமானது ஒரு நீண்ட தடயவியல் விசாரணை.
*******************
முதலில் மிகப்பெரிய கேள்வி…
“இந்த எலும்புக்கூடு யாருடையது?”
சூரிச்சில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் முதல், தடயவியல் ஆதாரங்கள் வரை பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…
இப்போது அந்தக் கேள்விக்கு ஒரு பதில் கிடைத்திருக்கிறது.
இந்த எலும்புக்கூடு 48 வயதுடைய இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் ஒரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது.
அவர் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரிச்சுக்கு வந்திருந்தார்.
எதற்காக?
உலகப் புகழ்பெற்ற Street Parade இசை விழாவில் கலந்து கொள்வதற்காக.
அதாவது…
அவர் சூரிச்சுக்கு வந்திருக்கிறார்.
ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..
அதுதான் இந்தக் கதையின் மிகப்பெரிய மர்மம்.
அவர் Street Parade நடைபெற்ற இடத்துக்குச் சென்றாரா?
அல்லது…
அங்கு செல்வதற்கு முன்பே ஏதாவது நடந்துவிட்டதா?
அவர் எங்கே இறந்தார்?
எப்படி இறந்தார்?
அதிலும் முக்கியமாக…
அவருடைய உடல் இந்தக் குறுகிய காற்றோட்டக் குழாய்க்குள் எப்படி சென்றது?
இந்தக் கேள்விதான் அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய புதிராக இருக்கிறது.
அவருடைய மரணம் விபத்தாக இருக்கலாம்.
உடல்நலக் குறைவு காரணமாக இயற்கையான மரணம் ஏற்பட்டிருக்கலாம்.
அல்லது…
யாராவது அவரைத் தாக்கியிருக்கலாமா?
கொலை செய்யப்பட்டிருக்கலாமா?
இந்தக் கேள்விகளுக்கு தற்போது உறுதியான பதில் இல்லை.
இங்கே இன்னொரு சிக்கல் இருக்கிறது.
அந்தக் கட்டிடத்தில் பின்னர் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இதனால் எலும்புகளும் சேதமடைந்துள்ளன.
அதாவது, மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான தடயங்கள் சில அழிந்திருக்கக்கூடும்.
அதனால்தான் மருத்துவ மற்றும் தடயவியல் ஆய்வுகள் மூலமாகவும் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்போது இந்தக் கதையில் நமக்குத் தெரிந்தது என்ன?
2022…
ஒரு 48 வயது இத்தாலியர் Street Parade நிகழ்வுக்காக சூரிச்சுக்கு வருகிறார்.
அதன்பிறகு…
அவர் காணாமல் போகிறார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…
2024-ல் ஒரு கட்டுமானப் பணியின்போது அவரது எலும்புக்கூடு ஒரு காற்றோட்டக் குழாய்க்குள் கண்டெடுக்கப்படுகிறது.
இப்போது அவர் யார் என்பது தெரிந்துவிட்டது.
ஆனால்…
அவர் எப்படி அங்கே சென்றார்?
அவர் எப்படி இறந்தார்?
அது விபத்தா… இயற்கை மரணமா… அல்லது குற்றமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் இன்னும் விடை இல்லை.
தற்போதைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு புதிய தடயம் கிடைத்தால்…
இந்த வழக்கு மீண்டும் திறக்கப்படலாம்.
அதுவரை…
சூரிச்சின் பரபரப்பான லாங்ஸ்ட்ராஸ் பகுதியில், ஒரு காற்றோட்டக் குழாய்க்குள் கண்டெடுக்கப்பட்ட இந்த மனித எலும்புக்கூடு…
ஒரு மர்மமாகவே தொடர்கிறது.






