Local Swiss News

ஆர்காவ் மாகாணத்தில் பரபரப்பு! கட்டிடத்துக்குள் தீ… அடர்த்தியான புகை!

ER3

ஆர்காவ் மாகாணத்தில் பரபரப்பு! கட்டிடத்துக்குள் தீ… அடர்த்தியான புகை!

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

வியாழக்கிழமை மதியம், ஹெர்ஸ்நாச் Herznach நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தால் கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்த்தியான புகை சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ER3

இதையடுத்து, அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

மேலும், வீட்டின் காற்றோட்டம் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை அணைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, புகையால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என்றும்,
வாகனங்களில் அந்தப் பகுதி வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகலாம்.

ஹெர்ஸ்நாச்சில் நிலத்தடி பார்க்கிங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *