சுவிட்சர்லாந்தில் அதிகாலை பயங்கரம்! மலைப்பாதை விபத்தில் பெண் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தில் அதிகாலை பயங்கரம்! மலைப்பாதை விபத்தில் பெண் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் அதிகாலை பயங்கரம்! மலைப்பாதை விபத்தில் பெண் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் இடம்பெற்ற கோரமான சாலை விபத்தில் 63 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை காலை, ரூஜ்மவுண்ட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்தபோது,
குறித்த பெண் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கார் சாலையை விட்டு விலகி,
சரிவில் உருண்டு சென்றுள்ளது.

இந்த விபத்தின் போது பெண் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதாகவும்,
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் வாட் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ஜெர்மனியில் வசித்து வந்த 63 வயதான குரோஷிய குடிமகள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து எவ்வாறு இடம்பெற்றது?
வாகனம் ஏன் கட்டுப்பாட்டை இழந்தது?
என்பது உள்ளிட்ட சரியான காரணங்களைக் கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை அரசு வழக்கறிஞர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.
வாட் மாகாணத்தில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






