2027க்குப் பிறகு ஹோட்டல் கட்டணம் உயரும்? VAT சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் பரபரப்பு!
2027க்குப் பிறகு ஹோட்டல் கட்டணம் உயரும்? VAT சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

2027க்குப் பிறகு ஹோட்டல் கட்டணம் உயரும்? VAT சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் பரபரப்பு!
சுவிட்சர்லாந்தில் ஹோட்டல்களுக்கான சிறப்பு VAT வரி விகிதம் தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது!
1996ஆம் ஆண்டு, நெருக்கடியில் இருந்த ஹோட்டல் துறைக்கு ஆதரவாக 3.8 சதவீத சிறப்பு VAT விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்தச் சலுகை 2027ஆம் ஆண்டு இறுதி வரை நடைமுறையில் உள்ளது. இதை 2035ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதா என்பதுதான் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதமாகியுள்ளது.
தேசிய மன்றம் ஏற்கனவே இந்தச் சிறப்பு வரி விகிதத்தை நீட்டிப்பதை நிராகரித்துள்ளது.
105க்கு 75 வாக்குகள் என்ற வித்தியாசத்தில் இந்தத் திட்டத்தை நிராகரித்த தேசிய மன்றம், ஹோட்டல் துறைக்கு பின்னர் வழக்கமான 8.1 சதவீத VAT பொருந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்தச் சலுகை நீக்கப்பட்டால், கூட்டாட்சி அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் பிராங்க் கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேலவை தரப்பில் இதற்கு மாறுபட்ட கருத்து உள்ளது.
வலுவான சுவிஸ் பிராங்க் மற்றும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஹோட்டல் துறைக்கு இந்த வரிச்சலுகை இன்னும் தேவைப்படுவதாக மேலவை குழுவின் பெரும்பான்மை வாதிடுகிறது. 3.8 சதவீத விகிதத்தை 2035 வரை தொடர அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், ஹோட்டல் துறைக்கான VAT விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது.
இறுதி முடிவு எடுக்கப்படும் வரை,
2027க்குப் பிறகு சுவிஸ் ஹோட்டல்களுக்கு எந்த VAT விகிதம் அமலும் என்பதில் தெளிவு இல்லை.





