வேட்டையாடும் உரிமம் பறிப்பு! மீண்டும் மீண்டும் விதிமீறல்… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வேட்டையாடும் உரிமம் பறிப்பு! மீண்டும் மீண்டும் விதிமீறல்… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வேட்டையாடும் உரிமம் பறிப்பு! மீண்டும் மீண்டும் விதிமீறல்… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் ஓபர்லேண்ட் பகுதியில் வேட்டைக்காரர் ஒருவருக்கு பெடரல் நீதிமன்றம் ஓராண்டு வேட்டைத்தடை விதித்துள்ளது!
கூட்டாட்சி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்படி,
குறித்த வேட்டைக்காரர் தனது சட்டப்பூர்வ கடமைகளை மீண்டும் மீண்டும் பின்பற்றத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவர் வேட்டையாடிய காட்டுப்பன்றிகளிடமிருந்து கட்டாயமாக எடுக்க வேண்டிய டிரைக்கினெல்லா மாதிரிகளை பலமுறை எடுக்கவில்லை.
டிரைக்கினெல்லா என்பது இறைச்சி மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தக்கூடிய சிறிய உருளைப்புழுக்கள்.
மேலும், வேட்டையாடிய விலங்குகள், விபத்துகள் மற்றும் அவதானித்த சம்பவங்கள் தொடர்பான தகவல்களையும் அவர் முறையாக வேட்டைப் பதிவேட்டில் பதிவு செய்யவில்லை.
இதற்காக 2021ஆம் ஆண்டு அவருக்கு 600 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர், காயமடைந்த இளம் காகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்கத் தவறியதாக கூறப்பட்ட மற்றொரு வழக்கில், மேலும் 500 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து மாகாண நிர்வாகம் முதலில் அவருக்கு மூன்று ஆண்டுகள் வேட்டைத்தடை விதித்தது.
மேல்முறையீட்டுக்குப் பிறகு இந்தத் தடை ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.
ஆனால், இதையும் ஏற்க மறுத்த வேட்டைக்காரர் பெடரல் நீதிமன்றத்தை நாடினார்.
எனினும், அவரது மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு வேட்டைத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
மேலும், நீதிமன்றச் செலவாக 2,000 சுவிஸ் பிராங்குகளையும் அவர் செலுத்த வேண்டும்.
வேட்டையாடும் உரிமைகளுடன் தொடர்பான கடமைகளை தொடர்ந்து புறக்கணித்ததால், சுவிட்சர்லாந்தில் வேட்டைக்காரருக்கு பெடரல் நீதிமன்றம் விதித்துள்ள இந்தத் தீர்ப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.






