யேசு–மரியா படத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு! சனிஜா அமேதி மேல்முறையீட்டை வாபஸ் பெற்றார்!
சூரிச் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தனது மேல்முறையீட்டை சனிஜா அமேதி திடீரென வாபஸ் பெற்றுள்ளார்!
ஆனால் இந்த வழக்கு இத்துடன் முடிவுக்கு வரவில்லை.
சூரிச் உயர் நீதிமன்றத்தின் தகவலின்படி, அமேதியின் மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், பல தனியார் மனுதாரர்களின் மேல்முறையீடுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இதனால், வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த விவகாரம் கடந்த 2024 செப்டம்பரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது, முன்னாள் Operation Libero இணைத் தலைவரான சனிஜா அமேதி, Instagram-ல் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதற்கு முன்பு, இயேசு மற்றும் மரியாவின் படத்தை நோக்கி காற்றுத் துப்பாக்கியால் சுமார் 20 முறை சுட்டதாக வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் படம் ஏல நிறுவனத்தின் பட்டியலிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு பக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
பதிவு வெளியான பின்னர், அமேதி அதனை நீக்கி மன்னிப்பும் கோரினார்.
ஆனால் இந்த சம்பவம் ஏற்கனவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் சூரிச் மாவட்ட நீதிமன்றம், அமேதிக்கு 60 தினசரி அபராதங்கள் — ஒவ்வொன்றும் 50 பிராங்குகள் — இரண்டு வருட நன்னடத்தை காலத்துடன் விதித்தது.
அதோடு 500 பிராங்க் அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
தற்போது அமேதி தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற்றுள்ள நிலையில், மற்ற தனியார் மனுதாரர்களின் மேல்முறையீடுகள் காரணமாக இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தின் கவனத்தில் தொடர்கிறது.
அடுத்த கட்டத்தில் உயர் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.