ஜெர்மானியர்கள் வெளியேறுங்கள்! – சுவிஸ் 10 மில்லியன் வாக்கெடுப்பு அதிரவைத்தது!
ஜெர்மானியர்கள் வெளியேறுங்கள்! – சுவிஸ் 10 மில்லியன் வாக்கெடுப்பு அதிரவைத்தது!

ஜெர்மானியர்கள் வெளியேறுங்கள் எனும் கோஷம் சுவிஸில் வலுப்பெறுவதாக இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள “10 மில்லியன் மக்கள் தொகை உச்சவரம்பு” வாக்கெடுப்பு தற்போது நாட்டின் எல்லைகளைத் தாண்டி ஐரோப்பா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக ஜெர்மனியில், இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ஜெர்மானியர்கள் வாழும் நிலையில், சில ஜெர்மன் ஊடகங்கள் இந்த முன்மொழிவை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த முயற்சி சுவிஸ் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளன.
ஆனால் மறுபுறம், சில ஜெர்மன் வாசகர்கள், “குடியேற்றம் குறித்து நாங்களும் இப்படி நேரடியாக வாக்களிக்க விரும்புகிறோம்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரான்சில் நிலைமை வேறுபட்டதாக உள்ளது. அங்கு பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் தொகை வளர்ச்சியை ஒரு தேவையாகவே பார்க்கின்றனர். எனவே சுவிட்சர்லாந்து ஏன் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த விரும்புகிறது என்பது பலருக்கு புரியாத புதிராக உள்ளது.
இத்தாலியில் இந்த வாக்கெடுப்பு பெரிதாக பேசப்படவில்லை. இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் வாழும் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகமாக இத்தாலியர்கள் இருப்பதால், இந்த முடிவு அவர்களையும் பாதிக்கக்கூடும்.
ஆஸ்திரியாவில் குறிப்பாக எல்லைப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வாக்கெடுப்பை கவனித்து வருகின்றனர். காரணம், சுவிஸுடன் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உறவுகள்.
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர நடமாட்ட ஒப்பந்தம் பாதிக்கப்படலாம் என்றும், அதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





