Local Swiss News

போர் அச்சமா? ஆயிரக்கணக்கான நிலத்தடி இராணுவ தளங்களை ஆய்வு செய்யும் சுவிட்சர்லாந்து!

போர் அச்சமா? ஆயிரக்கணக்கான நிலத்தடி இராணுவ தளங்களை ஆய்வு செய்யும் சுவிட்சர்லாந்து!

போர் அச்சமா? ஆயிரக்கணக்கான நிலத்தடி இராணுவ தளங்களை ஆய்வு செய்யும் சுவிட்சர்லாந்து!

ஐரோப்பாவில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல், சுவிஸ் இராணுவத்தை முக்கியமான முடிவை நோக்கி நகர்த்தியுள்ளது.

கூட்டாட்சி பாதுகாப்புத் துறையின் தகவலின்படி, நாட்டின் பாதுகாப்பு, அவசரகால மீள்திறன் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தை வலுப்படுத்த பாதுகாப்பான சேமிப்பு இடங்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்காக, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலத்தடி இராணுவ பதுங்கு குழிகளை மீண்டும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. நுகர்பொருட்கள், உதிரி பாகங்கள், மருந்துகள், மின்னணு சாதனங்கள், அபாயகரமான பொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பாக சேமிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

26j 1

இந்த ஆய்வை முன்னெடுக்க கூட்டாட்சி ஆயுத அலுவலகமான ‘அர்மாசுயிஸ்’ ஏற்கனவே பொது டெண்டரையும் வெளியிட்டுள்ளது. பழைய நிலத்தடி வசதிகளை குறைந்த செலவில், நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வழிகளை இந்த ஆய்வு ஆராய்கிறது.

பாதுகாப்பு காரணங்களால் எந்த பதுங்கு குழிகள் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பது வெளியிடப்படவில்லை. இருப்பினும், வரலாற்று பதிவுகளின்படி சுவிட்சர்லாந்தில் சுமார் 20 ஆயிரம் பாதுகாப்புக் கட்டமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் தனியார் மற்றும் பொது பாதுகாப்பு முகாம்களில், ஏறத்தாழ 90 லட்சம் பேருக்கு தங்குமிட வசதியும் உள்ளது.

ஐரோப்பாவின் பாதுகாப்பு சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில், சுவிட்சர்லாந்தின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button