Local Swiss News

பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை தொடர்புகொண்ட வங்கி… சட்டவிரோதம் என தாய் எதிர்ப்பு!

பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை தொடர்புகொண்ட வங்கி... சட்டவிரோதம் என தாய் எதிர்ப்பு!

பெற்றோருக்கு தெரியாமல் சுவிட்சர்லாந்தில் 15 வயது சிறுமி ஒருவருக்கு அனுப்பப்பட்ட வங்கிக் கடிதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிரிபர்க் கான்டோனல் வங்கி, சிறுமியின் 15வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து, ஒரு வவுச்சரையும் வழங்கியுள்ளது. ஆனால் அதே கடிதத்தில், 30 நாட்களுக்குள் வங்கிக்கு நேரில் வந்து அடிப்படை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாவிட்டால், அவரது கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் சிறுமியின் தாயாரை அதிர்ச்சியடையச் செய்தது. தொழில்முறையில் வழக்கறிஞரான அவர், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு, பெற்றோரின் அனுமதியின்றி சிறாரை நேரடியாக அணுகுவது சட்டவிரோதம் என்று சுட்டிக்காட்டினார்.

சுவிஸ் குடிமைச் சட்டத்தின்படி, சிறார்கள் மேற்கொள்ளும் முக்கியமான சட்டப் பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக பெற்றோர் அல்லது சட்டப் பிரதிநிதிகளின் ஒப்புதல் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

a10 33333

ஆனால் வங்கித் துறையில் நடைமுறையில் வேறுபட்ட அணுகுமுறை காணப்படுவதாக கூறப்படுகிறது. பல வங்கிகள், 11 வயதுக்கு மேற்பட்ட சிறார்களின் பகுத்தறியும் திறனை அடிப்படையாகக் கொண்டு, சில வங்கிச் சேவைகளை தாங்களாகவே நிர்வகிக்க முடியும் என கருதுகின்றன.

இதற்கிடையில், சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம், இந்த விவகாரத்தில் குடிமைச் சட்டமே பொருந்தும் என்றும், பொதுவாக சிறார்களுடன் வங்கி உறவு ஏற்படுத்த பெற்றோரின் ஒப்புதல் தேவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், சுவிஸ் நிதிச் சந்தை மேற்பார்வை ஆணையமான FINMA, சட்ட மீறல் குறித்த அறிகுறிகள் இருந்தால் விசாரணை நடத்த முடியும் என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது மகளின் கணக்கை மூடிவிட்டு வேறு வங்கிக்கு மாறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.

ஒரு பிறந்தநாள் வாழ்த்து கடிதம்… ஆனால் அதன் பின்னால் சட்டம், உரிமைகள் மற்றும் வங்கிகளின் நடைமுறைகள் குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button