Swiss News In Tamil

அபாய எச்சரிக்கை : மீண்டும் காலி செய்யப்பட்ட சுவிட்சர்லாந்தின் மலைக்கிராமம்

அபாய எச்சரிக்கை : மீண்டும் காலி செய்யப்பட்ட சுவிட்சர்லாந்தின் மலைக்கிராமம்

Graubünden மாநிலத்தில் அமைந்துள்ள Brienz கிராமம், இரண்டாவது முறையாக பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

2023 ஜூன் மாதத்தில், பிரியன்ஸ் பகுதியில் ஏற்பட்ட பெரிய மலைச்சரிவு காரணமாக, கிராம மக்கள் அனைவரும் இடம் பெயர்த்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த கிராமத்தில் எந்தவொரு நிரந்தர வாழ்வும் இல்லை.

இதற்குப் பிறகு, வீடு வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் நிலங்களை பராமரிக்கவும், வீடுகளைக் கண்காணிக்கவும், பகல்தினங்களில் மட்டும் கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அபாய எச்சரிக்கை

⚠️ மீண்டும் அபாய எச்சரிக்கை:

ஆனால் தற்போது நிலைமை மீண்டும் நிலமை மோசமானதாகியுள்ளது. பாறைகள், மலைச்சரிவில் இருந்து அசைவடையத் தொடங்கியுள்ளன என்பதைக் கண்காணித்துள்ள புவியியல் நிபுணர்கள், மீண்டும் கிராமத்தை மூட உத்தரவிட்டுள்ளனர்.

🔬 அடுத்த நடவடிக்கைகள்:

தற்போது புவியியல் மற்றும் பாதுகாப்பு குழுவினர், இடிவின் அளவையும், அதனால் ஏற்படும் அபாயத்தையும் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை பரிசோதித்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள். Brienz கிராமம், அதன் அழகிய இயற்கை சூழலுக்காக பிரபலமானது. ஆனால் தொடரும் பாறை இடிவுகள், அந்த இடத்தை ஒரு அபாயப் பிராந்தியமாக மாற்றியுள்ளன.

மக்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால், அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

@◄WRS

Related Articles

Back to top button