Swiss News In Tamil

லுசேர்ன் சுர்சியில் (Sursee) சாலை விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

லுசேர்ன் சுர்சியில் (Sursee) சாலை விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

கடந்த புதன்கிழமை ஜூன் 18ம் தேதி காலை சுமார் 9:30 மணியளவில், சுவிட்சர்லாந்தின் லுசேர்ன் மாகாணத்தில் உள்ள சுர்சி நகரத்தில் ஒரு கவலைக்கிடமான சாலை விபத்தில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், Kotten Kreisel அருகே நிகழ்ந்தது. ஒரு மூத்த பெண், அங்கு உள்ள பாதசாரி கடவையில் சாலையை கடக்க முயன்றபோது, ஒரு கனரக வாகனம் அவர் மீது மோதி கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் மூதாட்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை

விபத்தின் சரியான காரணம் குறித்து தற்போது லுசேர்ன் போலீசின் விபத்து நிபுணர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுர்சி மண்டலத்தின் அரசு வழக்குரைஞர் அலுவலகம் (Staatsanwaltschaft Sursee) இந்த வழக்கை அதிகாரபூர்வமாக கவனித்து வருகிறது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே அவரது பெயர் மற்றும் வயது உள்ளிட்ட தகவல்களை தற்போது வெளியிட முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16aab7ca 680c 43f9 8299 5c99ac6d81d3

இந்த விபத்தின் காரணமாக, Sursee – Oberkirch இடையிலான முக்கியமான மாநிலச் சாலை பல மணி நேரங்களுக்கு முடக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

@BRK NEWS, KAPO LU

Related Articles

Back to top button