Swiss Tamilar News

சுவிஸில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழர்கள்

சுவிஸில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழர்கள் அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

இலங்கையில் போர் அபாயம் இல்லாத நிலையில், இவ்வாறு நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய சுவிஸில் 9 வருடங்களாக வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளது.

சுவிசில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழர்கள்

தாய் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் புகலிடம் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அண்மைக்காலமாக இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button