Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மத நம்பிக்கையற்றவர் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் மத நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகையில் மத நம்பிக்கைகள் அற்றவர்களது எண்ணிக்கை பெரும்பான்மையானதாக மாற்றமடைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகள் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 32% இருந்து 31% குறைவடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. ஏனைய பிரதான மத வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில்

மத ரீதியான நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்க பொதுவாக ஆண்டு ஒன்றிற்கு 87 வீதமானவர்கள் ஏதாவது ஒரு தேவாலயத்தில் நான்கு அல்லது ஐந்து முறை ஆராதனைகளில் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக காரணிகளுக்காக இவ்வாறு அவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக திருமண வைபவங்கள் இறுதிச் சடங்குகள் போன்றவற்றில் பங்கேற்பதற்காக தேவாலயங்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மத சார்பு இல்லாதவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button