G7 மாநாட்டின்போது ஜெனீவா விமான நிலைய அணுகலில் சிரமம் – பயணிகளுக்கு எச்சரிக்கை
G7 மாநாட்டின்போது ஜெனீவா விமான நிலைய அணுகலில் சிரமம் – பயணிகளுக்கு எச்சரிக்கை

G7 மாநாட்டின்போது ஜெனீவா விமான நிலைய அணுகலில் சிரமம் – பயணிகளுக்கு எச்சரிக்கை
அடுத்த மாதம் பிரான்சின் எவியான் (Evian) நகரில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு, Geneva Airport செல்லும் பயணங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாநாடு ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதால் ஜெனீவா விமான நிலைய அணுகுமுறையில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில வாகனத் தரிப்பிடங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதனால், அந்த நாட்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் விமானம் புறப்படும் நேரத்துக்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே check-in செய்ய வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இயன்றவரை தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் பயணிகளிடம் கோரப்பட்டுள்ளது.
G7 மாநாட்டில் பல உலகத் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதால், ஜெனீவா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் சாலைப் போக்குவரத்து மற்றும் விமான நிலைய சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





