Swiss News In Tamil

பாலஸ்தீன ஊகவியலாளரை நாடு கடத்திய சுவிஸ் அரசு

பாலஸ்தீன ஊகவியலாளரை நாடு கடத்திய சுவிஸ் அரசு பலஸ்தீன அமெரிக்க ஊடகவியலாளரான அலி அபியுனிமாவை சுவிஸ் அரசாங்கம் விடுதலை செய்து நாடு கடத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக குறித்த ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீன உரிமைகளுக்காக பிரசாரங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அபியுனிமாவை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காகவும் இன அழிப்பினை எதிர்த்தமைக்காகவும், ஊடகவியலாளராக பணிகளை மேற்கொண்டமைமைக்காகவும் தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தாம் இழைத்த குற்றங்கள் இவைத்தான் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஜூரிச் நகரில் வைத்து ஊடகவியலாளர் அபியுனிமா கைது செய்யப்பட்டிருந்தார்.

நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறி செயல்பட்டதாக அபியுனிமா மீது குற்றம் சுமத்தப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கூட்டம் ஒன்றில் உரையாற்றவிருந்த நிலையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

பாலஸ்தீன ஊகவியலாளரை

போலீசார் அபியுனிமாவிற்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடைவிதித்துள்ளதுடன் குடிவரவு சட்டங்களை மீறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். சுவிஸ் சட்டங்களை மீறியதாக அதிகாரிகள் கூறிய போதிலும் தம் எவ்வாறான தவறை மேற்கொண்டது என்பதை தெளிவாக கூறவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூன்று நாட்களாக 24 மணித்தியாலங்களும் தம்மை சிறையில் தடுத்து வைத்திருந்ததாகவும் வெளியுலக தொடர்பினை முழுமையாக துண்டித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிட்சர்லாந்து போலீசார் தமது குடும்பத்துடன் கூட பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட போது இஸ்தான்புல்லுக்கு திரும்பும் நேரம் விமான நிலையத்தில் வைத்து அலைபேசி தம்மிடம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தம்மை ஓர் பாரதூரமான குற்றவாளி போன்று சிறையில் அடைத்த சுவிஸ் அரசாங்கம் இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக்கை வரவேற்று உபசரித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பலஸ்தீன ஜனாதிபதி பங்கேற்று இருந்தார். அபியுனிமாவின் கைது நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

Related Articles

Back to top button