Swiss News In Tamil

பெண் வீராங்களை உடைமாற்றும் அறையில் ரகசிய கமரா : சுவிஸ் நடுவர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

பெண் வீராங்களை உடைமாற்றும் அறையில் ரகசிய கமரா : சுவிஸ் நடுவர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஆஸ்திரியாவில் பெண்கள் கால்பந்து அணியின் பெண் வீராங்கனைகளை மறைமுகமாக வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டில் விசாரணைக்கு உள்ளானவர், சுவிச்சர்லாந்தின் பெயர் பெற்ற ஒரு நடுவர் என ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Blick வெளியிட்ட தகவலின்படி, SCR Altach பெண்கள் அணியின் உடை மாற்றும் அறையில் பல ஆண்டுகளாக SPY காமிராக்கள் பொருத்தி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்தக் காலத்தில் அவர் அந்த அணியில் நிர்வாக பொறுப்பிலும் இருந்தார். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தரவின் அளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி, 70 டெராபைட் வரை — சுமார் 1’550 மணி நேரம் — உயர்தர வீடியோவாக பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

N3

இந்நிலையில் சுவிஸ் கால்பந்து அமைப்பு ASF, தற்போது நடக்கின்ற விசாரணைகளை கருத்தில் கொண்டு, அந்த நடுவர் முழு விவகாரம் தெளிவடையும் வரை போட்டிகளுக்கு நியமனம் செய்யப்பட வேண்டாம் என்று தானே கோரிக்கை வைத்துள்ளதாக சுவான்சிக் மினுட்டன் (20Minuten) கேட்டதற்கு பதிலளித்துள்ளது.

ஆஸ்திரிய விளையாட்டு செயலாளரான மிச்சயேலா ஷ்மிட் இந்த குற்றச்சாட்டை “அருவருப்பானது” என்று கண்டித்துள்ளார். “பெண்கள் விளையாட்டாளிகள் தங்கள் உடைமாற்றும் அறையிலும் பாதுகாப்பாக இல்லை என்றால், அதற்கும் அப்பாற்பட்ட எல்லை மீறல் எதுவும் இல்லை” என அவர் கூறினார். அதிகாரிகளின் தீவிரமான விசாரணையும், அந்தக் கழகத்தின் உள்பார்வையும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

SCR Altach கிளப் பொது மேலாளர் கிறிஸ்டோஃப் லேங்லே, குற்றச்சாட்டுகள் வெளிவந்ததிலிருந்து போலீஸுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து, விசாரணைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் தாங்கள் வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

© KeystoneSDA

Related Articles

Back to top button