சுவிட்சர்லாந்தில் வேலைஇல்லா விகிதம் மீண்டும் உயர்வு – கொரோனா காலத்திற்குப் பிந்தைய அதிகபட்ச நிலை
சுவிட்சர்லாந்தில் வேலைஇல்லா விகிதம் மீண்டும் உயர்வு – கொரோனா காலத்திற்குப் பிந்தைய அதிகபட்ச நிலை

சுவிட்சர்லாந்தில் வேலைஇல்லா விகிதம் மீண்டும் உயர்வு – கொரோனா காலத்திற்குப் பிந்தைய அதிகபட்ச நிலை
சுவிட்சர்லாந்தில் வேலைஇல்லா விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் வேலைஇல்லா நிலை, கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அளவாகக் கருதப்படுகிறது.
Bundesamt für Statistik (BFS) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 266,000 பேர் வேலை இன்றி இருந்துள்ளனர்.
இதன் மூலம் வேலைஇல்லா விகிதம் 2025 ஆம் ஆண்டில் இருந்த 4.7 சதவீதத்திலிருந்து தற்போது 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 26,000 பேர் கூடுதலாக வேலை இழந்துள்ளனர்.
இந்த அளவு, 2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தின் ஆரம்பத்தில் பதிவான 5.8 சதவீத வேலைஇல்லா விகிதத்திற்குப் பின்னர் காணப்படும் மிக உயர்ந்த நிலையாகும்.

இருப்பினும், Bundesamt für Statistik (BFS) குறிப்பிட்டதன்படி, இந்த உயர்வுக்குப் பிறகும் சுவிட்சர்லாந்தின் வேலைஇல்லா விகிதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளை விட இன்னும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்தின் நிலைமை இன்னும் சீரானதாகவே கருதப்படுகிறது.
சமீப காலங்களில் உலக பொருளாதார மந்தநிலை, அதிகரித்த ஆற்றல் செலவுகள் மற்றும் நிறுவனங்களின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக பல துறைகளில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக மருந்து, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு சந்தையில் அழுத்தம் அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





