Swiss News In Tamil

வீட்டு பற்றாக்குறைக்கு புலம்பெயர்தலே காரணமல்ல – சுவிஸ் பொருளாதார நிபுணர்

வீட்டு பற்றாக்குறைக்கு புலம்பெயர்தலே காரணமல்ல – சுவிஸ் பொருளாதார நிபுணர்

வீட்டு பற்றாக்குறைக்கு புலம்பெயர்தலே காரணமல்ல – சுவிஸ் பொருளாதார நிபுணர்

சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் வீட்டு வசதி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் புலம்பெயர்தல் அல்ல என்றும், போதிய அளவில் வீடுகள் கட்டப்படாததே உண்மையான பிரச்சினை என்றும் சுவிஸ் பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Fredy Hasenmaile என்ற பொருளாதார நிபுணர், Raiffeisen Bank வழங்கிய பேட்டியில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவரது கருத்துப்படி, சுவிட்சர்லாந்தில் வீட்டு வசதி நெருக்கடி உருவாகியிருப்பதற்கான முக்கிய காரணம் “வழங்கல் பற்றாக்குறை” தான், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அல்ல.

இந்த கருத்து, குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் Swiss People’s Party (SVP) முன்வைக்கும் வாதங்களுக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.

SVP, சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் வீட்டு பற்றாக்குறைக்கு வெளிநாட்டவர்களின் வருகையே முக்கிய காரணம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

N11

ஆனால் Fredy Hasenmaile கூறுகையில், “சுவிட்சர்லாந்தில் கட்டிட நிர்மாணத்திற்கு தேவையான நிலங்கள் போதுமான அளவில் உள்ளன. ஆனால், கடுமையான விதிமுறைகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

அதாவது, புதிய வீடுகள் விரைவாக கட்டப்பட முடியாத நிலைதான் தற்போதைய வீட்டு நெருக்கடியை மோசமாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப காலமாக சுவிட்சர்லாந்தின் பல நகரங்களில் வாடகை விலைகள் வேகமாக உயர்ந்துவரும் நிலையில், வீட்டு வசதி மற்றும் குடியேற்றம் தொடர்பான அரசியல் விவாதங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக, ஜூன் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள “10 மில்லியன் சுவிட்சர்லாந்து வேண்டாம்” என்ற SVP பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பை முன்னிட்டு, இந்த விவகாரம் தற்போது நாட்டின் முக்கிய அரசியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Keystone

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button