சூரிக்கில் ஓட்டுநரில்லாமல் நகர்ந்த விநியோக வாகனம் – முதிய பெண் உயிரிழப்பு
சூரிக்கில் ஓட்டுநரில்லாமல் நகர்ந்த விநியோக வாகனம் – முதிய பெண் உயிரிழப்பு

சூரிக்கில் ஓட்டுநரில்லாமல் நகர்ந்த விநியோக வாகனம் – முதிய பெண் உயிரிழப்பு
சூரிக் (Zürich) நகரின் Höngg பகுதியில் ஓட்டுநரில்லாமல் நகர்ந்த விநியோக வாகனம் மோதியதில் கடுமையாக காயமடைந்திருந்த முதிய பெண் உயிரிழந்துள்ளார்.
Stadtpolizei Zürich வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, Michelstrasse மற்றும் Engadinerweg சந்திப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விநியோக வாகனம், இதுவரை தெளிவாக தெரியாத காரணங்களால் திடீரென நகரத் தொடங்கியுள்ளது.
ஓட்டுநர் இல்லாத அந்த வாகனம் சில மீட்டர்கள் தூரம் உருண்டுசென்று நடைபாதையில் சென்றுகொண்டிருந்த முதிய பெண்ணை மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான அந்த பெண் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக Staatsanwaltschaft Zürich மற்றும் Stadtpolizei Zürich இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
©Kapo ZH





