Swiss News In Tamil

கிறாவ்வுன்டனில் ஒன்பது மாதத்தில் 189 பண்ணை விலங்குகள் ஓநாய்களால் வேட்டை

கிறாவ்வுன்டனில் ஒன்பது மாதத்தில் 189 பண்ணை விலங்குகள் ஓநாய்களால் வேட்டை

கிறாவ்வுன்டன் கன்டோனில் இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 189 பண்ணை விலங்குகள் ஓநாய்களால் கொல்லப்பட்டதாக வேட்டை மற்றும் மீன்பிடிப்பு அலுவலகம் வெளியிட்ட புதிய தரவு தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 191 என்ற எண்ணிக்கையுடன் சாதாரணமாகச் சமமாகவே உள்ளது.

கிறாவ்வுன்டனின் பெரிய இரைதேடிகளுக்கான பொறுப்பாளர் ஆர்னோ புரோஜர் கூறியதாவது: கடந்த ஆண்டு சில ஓநாய் குழுக்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அகற்றப்பட்டன, அதேபோல் சில குட்டிகளும் கொல்லப்பட்டன. ஆனால் இவை உண்மையில் எவ்வளவு தாக்கம் செய்துள்ளன என்பதை பல ஆண்டுகளாகவே அறிவியல் மதிப்பீடு செய்து பார்த்தால்தான் புரியும் என்றார்.

இதற்கிடையில் கன்டோனில் ஓநாய் குழுக்களின் எண்ணிக்கை குறையவில்லை. புதிய குழுக்கள் உருவாகிய பகுதிகளும் உள்ளன. சில தெற்கு பள்ளத்தாக்குகளில் முன்பு இருந்த ஓநாய் குழுக்கள் தற்போது குழுக்கள் என வரையறுக்க தேவையான ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் லோஸ்டல்லோ மற்றும் ப்ரூசியோ பகுதிகளில் இரண்டு தனி ஓநாய்கள் இயங்கிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கரடி பற்றிய தரவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசந்த காலத்தில் 47 தடயங்கள், காலடிச் சுவடு, பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு கரடிகள் ஒரு காலத்திற்கு கிறாவ்வுன்டனில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் Zernez அருகிலும் இதனுடைய சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த கரடி இங்கு குளிர்கால உறக்கத்தில் செல்ல வாய்ப்பு இருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

© KeystoneATS

Related Articles

Back to top button