Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களுக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களுக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களுக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை

சீனா, சுவிட்சர்லாந்தின் பல முக்கிய நகரங்களை “அதிக அபாயம் உள்ள சுற்றுலா இடங்கள்” பட்டியலில் சேர்த்துள்ளது. குறிப்பாக Geneva, Zurich மற்றும் Lausanne நகரங்கள் குறித்து சீன அதிகாரிகள் புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், சுவிட்சர்லாந்து Schengen ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும், சமீப ஆண்டுகளில் அலைந்து திரியும் குற்றக்குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக தொடருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பாதுகாப்பு எச்சரிக்கை, சீனா பயண எச்சரிக்கை, ஜெனீவா திருட்டு, Zurich tourist warning, Lausanne safety news, Swiss Tamil News, Switzerland travel alert, Schengen crime warning, Chinese tourists Switzerland, Swiss city crime news

சீன அதிகாரிகள், சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பெறுமதியான பொருட்களை கண்காணிப்பின்றி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வாகனங்களுக்கு அருகில் வந்து உதவி செய்வதாக நடிக்கும் அந்நிய நபர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், திருடர்கள் கவனச்சிதறலை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பொதுவாக உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டாலும், சமீப காலங்களில் பெரிய நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் சிறிய அளவிலான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய எச்சரிக்கை, குறிப்பாக சீன சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.  ©WRS

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button