நவீன போர் தயாரிப்பில் சுவிஸ் இராணுவம் – ட்ரோன் திறன்கள் விரிவாக்கம்
நவீன போர் தயாரிப்பில் சுவிஸ் இராணுவம் – ட்ரோன் திறன்கள் விரிவாக்கம்

நவீன போர் தயாரிப்பில் சுவிஸ் இராணுவம் – ட்ரோன் திறன்கள் விரிவாக்கம்
Swiss Armed Forces நவீன போர் சூழ்நிலைகள் வேகமாக மாறிவருகின்றன எனக் கூறி, தனது ட்ரோன் திறன்களை பெரிதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, எதிர்காலத்தில் புதிய இராணுவ பயிற்சியாளர்களுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை இயக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டு வரும் வெடிகுண்டு ஏந்திய “காமிகாசே ட்ரோன்கள்” தொடர்பாகவும் சுவிஸ் இராணுவம் தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய திட்டங்களுக்காக ட்ரோன் மற்றும் எதிர்-ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகளை விரிவுபடுத்த 70 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஒதுக்குமாறு சுவிஸ் நாடாளுமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தின் முதல் செயல்பாட்டு anti-drone பாதுகாப்பு அமைப்பு அடுத்த மாதம் பிரான்சின் எவியான் (Evian) நகரில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டின் போது பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் ட்ரோன் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், போர் மற்றும் பாதுகாப்பு துறைகளில் அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் போரில் சிறிய ட்ரோன்கள் கூட தாக்குதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன.
இதனால் சுவிட்சர்லாந்தும் தனது பாதுகாப்பு கொள்கைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய அணுகுமுறைகளை அதிகரித்து வருகிறது.WRS





