Swiss News In Tamil

சுவிஸ் பெற்றோர்கள் அறிவியலில் மகன்களை விட மகள்களை குறைவாக நம்புகிறார்கள்

சுவிஸ் பெற்றோர்கள் அறிவியலில் மகன்களை விட மகள்களை குறைவாக நம்புகிறார்கள்

ஸ்விட்சர்லாந்து ETH Zurich வெளியிட்ட “STEM Mood Barometer 2025” ஆய்வு படி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற STEM துறைகள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெறும் நிலையில் இருப்பினும், பாலின பார்வையில் மதிப்பீடு இன்னும் சமமல்ல.

1,600 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஆண்கள் தங்களின் ( STEM ) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் உள்ள திறனை 10ல் 5.6 என்ற சராசரியாக மதிப்பிட்டுள்ளனர். பெண்கள் அதே துறையில் 4.1 புள்ளி மட்டுமே அளித்துள்ளனர்.

N4

பெற்றோர் குழந்தைகளை மதிப்பிடும் போது கூட பாகுபாடு தெளிவாக உள்ளது. தொழில்நுட்பத்தில் மகன்களுக்கு 5.7, மகள்களுக்கு 4.4 என மதிப்பீடு காணப்படுகிறது.. கணிதம், கணினி அறிவியல், அறிவியல் ஆகிய துறைகளிலும் மகன்கள் உயர்வாக மதிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆய்வு, “இந்த மனநிலைகள் தலைமுறைகள் கடந்து வரும் பாலின நம்பிக்கை காரணம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதனை மாற்ற, குழந்தைப் பருவத்திலிருந்தே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் கற்றல் நம்பிக்கை, விளையாட்டு கற்றல் முறை, பாலின பாகுபாடற்ற பாடத்திட்டம் அவசியம் என்று ETH Zurich எச்சரிக்கிறது.

Related Articles

Back to top button