Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை புத்தாண்டு கொண்டாட ரெடி.!!

சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை புத்தாண்டு கொண்டாட ரெடி.!! பிரபல இந்திய நடிகையான கரீனா கபூர், விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அவர் சுவிட்சர்லாந்தில் உள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் கரீனா, தனது விடுமுறை தொடர்பான சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கரீனா கபூர், தனது கணவரும் பிரபல நடிகருமான சாயிஃப் அலி கான் மற்றும் தன் பிள்ளைகளான Taimur மற்றும் Jehஉடன் சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.

சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை புத்தாண்டு கொண்டாட ரெடி.!!

அவ்வப்போது தங்கள் விடுமுறை தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துவரும் கரீனா, தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்றில், ஒளியைத் தேடி… புத்தாண்டுக்கு இன்னமும் நான்கே நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கணவர் குழந்தைகள் மட்டுமின்றி கரீனாவுடன் அவரது தோழியான நடாஷா பூனாவாலாவும் இணைந்துகொள்ள, அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இப்படித்தான் குளிரை சமாளிக்கிறோம் என குறும்பாக குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button