Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் நள்ளிரவில் கார்களில் திருட முற்பட்ட நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில், ஆர்காவ் – மொஹ்லின் இல் வசிப்பவர்கள் ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் கார் கதவுகளை திறக்க முயற்சிப்பதாக *போலீஸ் அவசர அழைப்பு**க்கு புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாலை 1:45 மணியளவில் பல ரோந்துகளுடன் வந்த  போலீசார் ஆரம்பத்தில் தேடுதல் நடத்திய போதும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.. ஆனால் 04:00 மணியளவில் குடியிருப்பாளர்கள் சந்தேக நபரை மீண்டும் பார்த்ததால் மீண்டும் புகாரளித்தனர்.

Mohlin AG

இதனடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் சுவிட்சர்லாந்தில் புகலிடகோரிக்கை நிராகரிக்கப்பட்ட 28 வயதான துனிசிய நாட்டைச்சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆர்காவ் போலீசார் மேலதிக விசாரணைகளை தற்போது மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Kapo AG

Related Articles

Back to top button