Swiss News In Tamil
சூரிச்சில் ஆபரணக்கடையை அடித்து நொறுக்கி கொள்ளை.!!
சூரிச்சில் ஆபரணக்கடையை அடித்து நொறுக்கி கொள்ளை.!!
திங்கட்கிழமை இரவு சூரிச் நகர மாவட்டம் 9 இல் ஒரு ஆபரண கடை உடைக்கப்பட்டுள்ளதாக சூரிச் நகர காவல்துறை அறிவித்துள்ளது. அடையாளம் தெரியாத குற்றவாளிகள் ஆபரண கடையின் நுழைவு வாயில் கதவை வாகனம் மூலம் அடித்து உடைத்துள்ளனர்.
இதன் பிறகு,அங்கிருந்த விலைமதிப்புள்ள ஆரணங்கள் மற்றும் சில பொருட்களை திருடியதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் குற்றவாளிகள் தெரியாத திசையில் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வளவு நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டன என்பதை ஜூரிச் நகர காவல்துறையால் இதுவரை கூற முடியவில்லை.

இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறதுஇ குற்றவாளிகள் பற்றிய தகவல்களை போலீசார் தேடி வருகின்றனர்.





