Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ரொக்கப்பணம் மூலம் நடக்கும் பரிவர்த்தையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் பணபரிவர்த்தனைகளில் அதாவது பணக்கொடுப்பனவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு முதல் முறையாக பணக்கொடுப்பனவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சூரிச் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ் மற்றும் செயின்ட் கேலன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Stocksy txp333bf2f7Cb1300 Medium 2762454

குறித்த பல்கலைக்கழகங்களினால் வியாழன் அன்று வெளியிட்ட பத்தாவது சுவிஸ் பேமென்ட் மானிட்டர் முடிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சாதனங்கள் மூலமும்இ டெபிட் கார்ட்டு மூலமும் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சாதனங்கள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 2023 ம் ஆண்டில் 23.3 வீதமாகவும்இ டெபிட்கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 29.3 வீதமாகவும் காணப்படுகிறது. பணக்கொடுக்கல் 3.2 வீதத்தினால் சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button