Swiss News In Tamil

சூரிச் லங்திராசவில் ஒரே மாதத்தில் 1.7 மில்லியன் பிராங்குகள் வருமானம்

சூரிச் சில் உள்ள லாங்ஸ்ட்ராஸ்சவில் வீதிக்கட்டுப்பாடுகளை மீறி வாகனம் செலுத்தியவர்களின் மூலம் அதிகளவு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன் கிழமை பாதுகாப்புத் துறை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே மாதத்தில், நகர காவல்துறை 100 பிராங்குகளின் அபராத தொகை மூலம் மட்டுமே சுமார் 1.7 மில்லியன் பிராங்குகள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓட்டுநர் தடை சூரிச்சின் கருவூலத்தை நிரப்புகிறது

17,310 ஓட்டுனர்கள் விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 2023 இன் இறுதியில் நகரத்தின் இரு வீதிகளில் புதிய விதி முறை அமுல் செய்யப்பட்டது. காலை முதல் இரவு வரை குறித்த இரண்டு வீதிகளிலும் தனியார் மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம் ஓட்டும் தடையை ஏராளமான ஓட்டுநர்கள் கடைப்பிடிக்காததால், சூரிச் நகர காவல்துறை சோதனைகளை மேற்கொண்டது. ஜனவரி 8 ஆம் தேதி முதல், காலை 5:30 முதல் இரவு 10 மணி வரை அமலில் உள்ள தடையை கண்காணிக்க தானியங்கி போக்குவரத்துக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.

இந்த கேமரா செயல்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குள் 17,310 முறைகேடு டிரைவர்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓட்டுனர்களுக்கான அபராதம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தொகையே 1.7 மில்லியன் பிராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button