Swiss News In Tamil
பாசல் கன்டோன் : கத்தியை காட்டி மிரட்டி இளைஞனிடம் கொள்ளை
கன்டோன் பாசலில் கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளைன்பாசலில் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 29 வயது இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தும் முயற்சியில் ஈடுபட்டு பின்னர் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சந்தேகநபர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போதும் யாரும் கைதாகவில்லை. குறித்த சம்பவம் நன்றிரவு 12:45 அளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





