சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை சிறிதளவு குறைந்தாலும் செலவு இன்னும் அதிகம்
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை சிறிதளவு குறைந்தாலும் செலவு இன்னும் அதிகம்

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை சிறிதளவு குறைந்தாலும் செலவு இன்னும் அதிகம்
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறைந்துள்ளதாக Touring Club Schweiz (TCS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் செலவு இன்னும் பொதுமக்களுக்கு பெரிய சுமையாகவே இருந்து வருகிறது.
TCS வெளியிட்ட தகவலின்படி, இந்த வார நடுப்பகுதியில் ஒரு லிட்டர் Unleaded 95 பெட்ரோலின் சராசரி விலை 1.89 சுவிஸ் பிராங்காக இருந்தது. அதேவேளை Unleaded 98 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.00 பிராங்காகவும், டீசல் 2.14 பிராங்காகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, பெட்ரோல் விலை சமீபத்திய உச்ச விலையிலிருந்து ஒரு சென்ட்டால் குறைந்துள்ள நிலையில், டீசல் விலை மூன்று சென்ட்டுகள் வரை குறைந்துள்ளது. இருந்தாலும், கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன.

குறிப்பாக ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக டீசல் விலை லிட்டருக்கு 2.24 பிராங்காக உயர்ந்திருந்தது. இது ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பதிவான மிக உயர்ந்த விலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதியில், அதாவது மத்திய கிழக்கு பதற்ற நிலை உருவாகும் முன்பு, Unleaded 95 பெட்ரோல் சராசரியாக 1.67 பிராங்காகவும், Unleaded 98 1.78 பிராங்காகவும், டீசல் 1.79 பிராங்காகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதனால் தற்போது பெட்ரோல் விலை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், டீசல் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக TCS தெரிவித்துள்ளது. குறிப்பாக தொழிற்துறைகளில் டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதே இந்த பெரிய விலை உயர்வுக்குக் காரணம் எனவும் விளக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 108 அமெரிக்க டாலருக்கு குறைவாக இருந்தது. இது ஏப்ரல் மாத இறுதியில் இருந்த விலையை விட சுமார் 10 டாலர்கள் குறைவாகும்.
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் குறைந்தாலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையில் தொடர்வதால், தினசரி வேலைக்காக வாகனங்களை நம்பியிருக்கும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறையினர் அதிக செலவின சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
© KeystoneSDA





