Swiss News In Tamil

சிறுவர்களுக்கான சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த ஹோட்டல்.!!

சிறுவர்களுக்கான சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த ஹோட்டல்.!! குடும்பங்களுக்கு ஏற்ற மிகவும் பிரபல்யமான ஹோட்டலாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹோட்டல் இடம்பிடித்துள்ளது.

குடும்பங்களுக்கான ஹோட்டல் எனும் போது குழந்தைகளுக்கான வசதிவாய்ப்புகளும் கருத்தில் கொள்ளப்படுகிறது. குழந்தைகளுக்கான வசதிகளுடன் ஹோட்டல்களை தேடுவது என்பது சிரமமான காரியமே.

அவ்வாறான வசதிகள் கொண்ட ஹோட்டலாக முதலிடத்தில் கிளாறுஸ் மாகாணத்தில் உள்ள ப்ராவுன்வால்ட் கிராமத்தில் உள்ள marchenhotel-braunwald முதலிடத்தை பெற்றுள்ளது.

marchenhotel-braunwald, சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த ஹோட்டல்

கின்டர் இன்போ என்ற இணையத்தளமே இத்தகவலை வழங்கியுள்ளது. ஐரோப்பா முழுவதுமான சிறுவர்களுக்கான ஹோட்டல்கள்; குறித்த தகவல்களை அந்த இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

marchenhotel-braunwald

அந்த இணையத்தளத்தினுடைய தரவரிசையிலையே இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தில் முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button