மிக்ரோஸ் ஸ்டோர்களில் பொருட்கள் தட்டுப்பாடு ஏன்.? வெளியான காரணம்
மிக்ரோஸ் ஸ்டோர்களில் பொருட்கள் தட்டுப்பாடு ஏன்.? வெளியான காரணம்
மிக்ரோஸ் கடைகளில் சமீபத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பல பொருட்கள் இல்லாமல் காணப்படுவது தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன. . இதற்குப் பின்னால் ஒரு தொழில்நுட்ப சிக்கல் தான் காரணம் என தற்போது வெளியாகியுள்ளது.
மிக்ரோஸின் துணை நிறுவனமான எல்சா (Elsa), சுமார் 10 நாட்கள் முன் புதிய ஒரு IT சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த புதிய அமைப்பு எதிர்பாராத வண்ணம் விநியோகச் சங்கிலியில் தடைகளை உருவாக்கி விட்டது. குறிப்பாக மிக்ரோஸின் சொந்த பிராண்டான பால் சார்ந்த பொருட்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கடைகளுக்கு சரியான நேரத்தில் விநியோகம் செய்ய முடியாமல் போயுள்ளது. எனினும் பொருட்கள் தட்டுப்பாடு என வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு நேர்மறையான விளைவாக, காரிடாஸ் (Caritas) போன்ற தன்னார்வ அமைப்புகள், கடைகளுக்கு நேரம்தவறியதால் விற்பனைக்குப் போக முடியாத உணவுப் பொருட்களை பெறுகின்றன.
மிக்ரோஸ் நிறுவனம், “சந்தையின் நிலைமை இன்னும் இரண்டு வாரங்களில் சீராகும்” என தெரிவித்துள்ளது. இது போன்ற நேரங்களில் உணவுப் பொருட்கள் வீணாவதைக் காட்டிலும் காரிடாஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடாக அவசியமுள்ள மக்களிடம் சென்றடைவது வரவேற்கத்தக்கது.





