ரைன் நதியில் மல பாக்டீரியா… புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன?
ரைன் நதியில் மல பாக்டீரியா... புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன?

ரைன் நதியில் மல பாக்டீரியா… புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன?
“சுவிட்சர்லாந்தில் ரைன் நதியில் மல பாக்டீரியா கண்டறியப்பட்டதாக வெளியான தகவலால் ஏற்பட்ட கவலைக்கு, தற்போது அதிகாரிகள் நிம்மதியான விளக்கத்தை வழங்கியுள்ளனர்.
ஃபாயர்தாலன் மற்றும் ஃபிளாச் Feuerthalen und Flaachபகுதிகளுக்கு இடையே உள்ள ரைன் நதியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் மலக் கிருமி மாசுபாடு கண்டறியப்பட்டது. இதனால், அப்பகுதியில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது, குளித்த பிறகு உடனடியாக சுத்தமாகக் குளிக்கவும், நதி நீரை விழுங்காமல் இருக்கவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளில், அந்த மாசுபாடு தற்காலிகமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையேயான ஆய்வகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது ரைன் நதியின் நீர்தரம் மீண்டும் ‘நல்ல’ நிலையிலிருந்து ‘மிக நல்ல’ நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த மாசுபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், தற்போது பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய நிலை இல்லை என்றும், நீரின் தரம் பாதுகாப்பான அளவில் இருப்பதாகவும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
என்றாலும், இயற்கை நீர்நிலைகளில் குளிக்கும் போது வழக்கமான சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.





