Local Swiss News

சூரிச்சை தாக்கும் கொடிய புயல்! 4ஆம் நிலை எச்சரிக்கை… வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!

சூரிச்சை தாக்கும் கொடிய புயல்! 4ஆம் நிலை எச்சரிக்கை… வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!

சூரிச்சை தாக்கும் கொடிய புயல்! 4ஆம் நிலை எச்சரிக்கை… வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!

சூரிச் பெருநகரப் பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என MeteoSwiss அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபிரான்ஃபெல்ட், ஸ்டெய்ன் ஆம் ரைன், வின்டர்தூர், சூரிச் மற்றும் பேடன் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4ஆம் நிலை வானிலை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17j 11

இந்தப் புயலின் போது கனமழை, ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் ஆபத்தான மின்னல் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு, சிறிய ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வது, நிலச்சரிவு, மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற அபாயங்களும் இருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே திறந்தவெளி, மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், முடிந்தவரை பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்னல் தாக்கும் சூழ்நிலையில் வெளியில் சிக்கினால், கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமர வேண்டும் என்றும், தரையில் படுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செயின்ட் கேலன் மற்றும் அப்பென்செல் கண்டோன்களுக்கும் 3ஆம் நிலை வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக, ஹோர்கனில் நடைபெற்ற SRF-இன் பிரபல “Donnschtig-Jass” நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மீண்டும் பார்வையாளர்களுடன் நடைபெற்றது.

உங்கள் பகுதியில் வானிலை மோசமடைந்தால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button