புறப்பட இருந்த சுவிஸ் விமானம் திடீரென திரும்பியது! சூரிச் விமான நிலையத்தில் பரபரப்பு!
புறப்பட இருந்த சுவிஸ் விமானம் திடீரென திரும்பியது! சூரிச் விமான நிலையத்தில் பரபரப்பு!

புறப்பட இருந்த சுவிஸ் விமானம் திடீரென திரும்பியது! சூரிச் விமான நிலையத்தில் பரபரப்பு!
சூரிச்சிலிருந்து நியூயார்க் நோக்கி புறப்படவிருந்த Swiss International Air Lines-இன் LX14 விமானம், ஓடுபாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த இந்த ஏர்பஸ் A330 விமானம், ஓடுபாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வேளையில், ஒரு பயணி சுயநினைவின்றி இருப்பதை விமானப் பணியாளர்கள் கவனித்தனர்.

இதையடுத்து, விமானத்தின் கேப்டன் உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானத்தை மீண்டும் நுழைவாயிலுக்குத் திருப்பினார்.
அங்கு ஏற்கனவே ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். மயக்கமடைந்த பயணி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சமூக வலைதளங்களில் வெளியான சில தகவல்களில், அந்தப் பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டாலும், Swiss நிறுவனம் அதனை மறுத்துள்ளது. பயணி எந்த நேரத்திலும் வன்முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும், முழு நடவடிக்கையும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்றதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பின்னர் அந்தப் பயணியின் சாமான்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்ட பிறகு, LX14 விமானம் சுமார் இரண்டு மணி நேர தாமதத்துடன் நியூயார்க் நோக்கிப் புறப்பட்டது.





