Local Swiss News

சூரிச்சில் அவசர தடை! வீட்டுத் தோட்டத்தில்கூட கரி அடுப்பு பயன்படுத்தக் கூடாது – விதிமீறினால் வழக்கு!

சூரிச்சில் அவசர தடை! வீட்டுத் தோட்டத்தில்கூட கரி அடுப்பு பயன்படுத்தக் கூடாது – விதிமீறினால் வழக்கு!

சூரிச்சில் அவசர தடை! வீட்டுத் தோட்டத்தில்கூட கரி அடுப்பு பயன்படுத்தக் கூடாது – விதிமீறினால் வழக்கு!

சூரிச்சில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியால், நகர நிர்வாகம் முக்கிய அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜூலை 17 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல், சூரிச் நகரம் முழுவதும் தீ மூட்டுதல், கரி அடுப்பில் பார்பிக்யூ செய்வது மற்றும் பட்டாசு வெடிப்பது ஆகிய அனைத்திற்கும் பொதுத் தடை அமலுக்கு வந்துள்ளது.

17j 4

இந்தத் தடை பொது இடங்களுக்கு மட்டுமல்ல, தனியார் தோட்டங்களில் கரி அடுப்பைப் பயன்படுத்துவதற்கும் பொருந்தும் என நகர நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நகர பாதுகாப்புத் துறை பொறுப்பாளர் கரின் ரைக்கார்ட், பல வாரங்களாக நீடித்து வரும் வறட்சி காரணமாக இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சூரிச் மாகாணத்தில் காட்டுத்தீ அபாயம் 5-இல் 4-வது நிலையில் இருப்பதாகவும், ஜூன் மாத இறுதியிலிருந்தே காடுகள் மற்றும் காட்டு எல்லையிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் தீ மூட்டத் தடை அமலில் இருப்பதாகவும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

வானிலை முன்னறிவிப்புகளின்படி, குறிப்பிடத்தக்க மழைக்கு வாய்ப்பு இல்லாததால் இந்தத் தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button