சுவிஸ் விமான நிலைய அவசர எச்சரிக்கை! ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க தயாராகுங்கள்!
சுவிஸ் விமான நிலைய அவசர எச்சரிக்கை! ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க தயாராகுங்கள்!

சுவிஸ் முக்கிய விமான நிலையங்கள், குறிப்பாக சூரிச் மற்றும் ஜெனீவா, ஐரோப்பாவின் புதிய பயோமெட்ரிக் நுழைவு/வெளியேறுதல் முறை – EES காரணமாக கடும் தாமதங்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளன.
இந்த புதிய முறையின்படி, ஷெங்கன் அல்லாத நாடுகளிலிருந்து வரும் ஒவ்வொரு பயணியும் விமான நிலையத்தில் உள்ள கியோஸ்கில் தங்கள் கடவுச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதோடு, நான்கு கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

சூரிச் விமான நிலையம் வெளியிட்ட தகவலின்படி, உச்ச நேரங்களில் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடிவரவு வரிசையில் காத்திருக்க நேரிடலாம். ஜெனீவா விமான நிலையத்திலும் இதேபோன்ற தாமதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே சுவிஸ் அல்லது பிற ஷெங்கன் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பயணிகளுக்கு இந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோடைக்கால விடுமுறை கூட்டம் நெருங்கி வரும் நிலையில், பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வரவும், கூடுதல் நேரத்தை திட்டமிடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்





