ஆபத்தான நோயாளிகள் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்க மருத்துவர்களுக்கு கட்டாயம் வருமா?
ஆபத்தான நோயாளிகள் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்க மருத்துவர்களுக்கு கட்டாயம் வருமா?

ஆபத்தான நோயாளிகள் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்க மருத்துவர்களுக்கு கட்டாயம் வருமா?
வின்டர்தூர் (Winterthur) பகுதியில் கடந்த வாரம் கத்தியால் மூவரை காயப்படுத்திய நபர் மனநல சிகிச்சை பெற்றிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் மருத்துவ ரகசிய சட்டம் குறித்து புதிய அரசியல் விவாதம் உருவாகியுள்ளது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத்திற்கு ஆபத்தாக இருக்கக்கூடிய மனநல நோயாளிகள் பற்றிய தகவல்களை மனநல மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போலீசாருக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனில், சுவிட்சர்லாந்து சட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மருத்துவர்–நோயாளர் ரகசியக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்த உறுப்பினர் ஜாக்குலின் டி குவாட்ரோ (Jacqueline de Quattro), தீவிரவாத சிந்தனைகள் அல்லது ஆபத்தான தொடர்புகள் கொண்ட நபர்கள் குறித்து சுகாதார பணியாளர்கள் கட்டாயமாக தகவல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. அதனால் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவு தொடர்பாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் விவாதிக்கவுள்ளனர். மனித உரிமைகள், தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையை இந்த விவகாரம் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.





