திருமணத்திற்கு மாற்றாக புதிய சட்ட ஏற்பாட்டை பரிசீலிக்கும் சுவிட்சர்லாந்து
திருமணத்திற்கு மாற்றாக புதிய சட்ட ஏற்பாட்டை பரிசீலிக்கும் சுவிட்சர்லாந்து

திருமணத்திற்கு மாற்றாக புதிய சட்ட ஏற்பாட்டை பரிசீலிக்கும் சுவிட்சர்லாந்து
திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளுக்கும் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கும் புதிய திட்டத்தை சுவிட்சர்லாந்து பரிசீலித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் “PACS” முறைமையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த திட்டம், திருமணம் செய்யாமல் வாழும் ஜோடிகள் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சில சட்ட உரிமைகளை பெற அனுமதிக்கும்.
இதன் மூலம் சொத்து, மருத்துவ அவசரநிலை முடிவுகள் மற்றும் சில சமூக பாதுகாப்பு உரிமைகள் போன்றவை தெளிவாக நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக Legal Affairs Committee of the Council of States ஆலோசனை செயல்முறையை ஆரம்பித்துள்ளது. இந்த ஆலோசனை செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும்.
சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய சட்ட திட்டம் குறித்து அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் அதிகரித்துள்ளன.





